வணக்கம் நண்பர்களே ! இந்த பதிவில் HTML, CSS, JavaScript என்றால் என்ன? அவை ஒரு Website-ல் என்ன வேலை செய்கின்றன? என்பதை எளிமையாக பார்க்கலாம். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள Comment பகுதியில் பதிவு செய்யுங்கள். HTML ஒரு வீட்டை கட்டும்போது முதலில் செங்கல், சிமெண்ட் மற்றும் கம்பிகளை வைத்து ஒரு அமைப்பை உருவாக்குவார்கள். அதேபோல ஒரு Website-க்கு அடிப்படை உருவமைப்பை உருவாக்க HTML பயன்படுகிறது. எளிமையாக சொன்னால், HTML என்பது ஒரு Website-ன் “எலும்புக்கூடு” போன்றது. HTML இல்லாமல் Website உருவாக்குவது சாத்தியமில்லை . CSS வீட்டிற்கு அமைப்பு மட்டும் இருந்தால் போதாது; அதற்கு வண்ணம் தீட்டி அழகுபடுத்த வேண்டும். அதேபோல Website-ஐ அழகாக காட்ட CSS பயன்படுகிறது. வண்ணங்கள், Font style, Layout, Animation போன்றவற்றை CSS கட்டுப்படுத்துகிறது. JavaScript ஒரு வீட்டிற்கு மின்சார இணைப்பு எவ்வளவு முக்கியமோ, அதேபோல Website-க்கு உயிர் கொடுப்பது JavaScript. ஒரு Button-ஐ அழுத்தும்போது action நடப்பது, தகவல்கள் Database-...