HTML,CSS AND JAVASCRIPT full explanation in Tamil

 வணக்கம் நண்பர்களே!


இந்த பதிவில் HTML, CSS, JavaScript என்றால் என்ன? அவை ஒரு Website-ல் என்ன வேலை செய்கின்றன? என்பதை எளிமையாக பார்க்கலாம்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள Comment பகுதியில் பதிவு செய்யுங்கள்.

HTML

ஒரு வீட்டை கட்டும்போது முதலில் செங்கல், சிமெண்ட் மற்றும் கம்பிகளை வைத்து ஒரு அமைப்பை உருவாக்குவார்கள்.

அதேபோல ஒரு Website-க்கு அடிப்படை உருவமைப்பை உருவாக்க HTML பயன்படுகிறது.

எளிமையாக சொன்னால், HTML என்பது ஒரு Website-ன் “எலும்புக்கூடு” போன்றது. HTML இல்லாமல் Website உருவாக்குவது சாத்தியமில்லை.

CSS

வீட்டிற்கு அமைப்பு மட்டும் இருந்தால் போதாது; அதற்கு வண்ணம் தீட்டி அழகுபடுத்த வேண்டும்.

அதேபோல Website-ஐ அழகாக காட்ட CSS பயன்படுகிறது.

வண்ணங்கள், Font style, Layout, Animation போன்றவற்றை CSS கட்டுப்படுத்துகிறது.

JavaScript

ஒரு வீட்டிற்கு மின்சார இணைப்பு எவ்வளவு முக்கியமோ, அதேபோல Website-க்கு உயிர் கொடுப்பது JavaScript.

ஒரு Button-ஐ அழுத்தும்போது action நடப்பது, தகவல்கள் Database-ல் சேமிக்கப்படுவது, Login system வேலை செய்வது போன்ற Dynamic செயல்பாடுகள் அனைத்தும் JavaScript மூலம் நடைபெறுகின்றன.

முடிவு

இப்போது HTML, CSS, JavaScript பற்றிய அடிப்படை புரிதல் உங்களுக்கு கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.

நம்முடைய இணையதளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள். இந்த பதிவைப் பற்றிய உங்கள் கருத்துகளை Comment-ல் கூறுங்கள்.

           


                                நன்றி!



Comments